Milestones

எனது மைல்கற்கள்!
01) 1979ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் பிறந்து சொந்த ஊரான புங்குடுதீவில் உறவுகளுடன் வாழ்ந்து அம்மாவின் முன்பள்ளியிலேயே மாணவனாக கல்விகற்று இரட்டை உயர்வுடன் சிறீசித்திவிநாயகர் மகாவித்தியலயத்தில் 1984ம் ஆண்டு தொடக்கம் இடைநிலைக்கல்வியை பெற்றுக்கொண்டேன்

02) 1989 ஆவணியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றேன், அதே ஆண்டு யாழ் இந்துக்கல்லூரி ஆண்டு 6 அனுமதிப்பரீட்சையில் சித்தியடைந்தேன்

04) 1990 தை 9ம் திகதி யாழ் இந்துக்கல்லூரியில் இணைந்துகொண்டஇதே நாளில் கல்லூரி விடுதியில் இணைந்துகொண்டேன்

05) 1991 ம் ஆண்டு; கல்லூரி சதுரங்க கழகத்தில் இணைந்து கொண்டேன்.

05) 1992ம் ஆண்டு அறிவொளி கல்வி நிலையத்தின் நவராத்திரி விழா நல்லை ஆதீனத்தில் வாசித்தபோது முதன்முதல் பொதுமேடையேறி எனது கன்னிக்கவிதையினை வாசித்தேன்

05) 1993 ம் ஆண்டு கல்லூரி லியோகழகத்தில் உறுப்பினராக இணைந்து கொண்டேன்

06) 1994ம் ஆண்டு கல்லூரியில் ஆண்டு 10 தவணைப்பரீட்சையில் சராசரிப்புள்ளி 75 பெற்ற மாணவன் என்பது கல்லுரியில் படிப்பில் முதல் எழுச்சி

06) 1995ம் ஆண்டு வன்னிக்கு இடம்பெயர்வு

07) 1996ம் ஆண்டு யூலை நடைபெற்ற விசேட கல்விப்பொதுத்தராதர (சாதாரணம்)பரீட்சையில் வன்னியில் இருந்தவாறே தோற்றி சித்தியடைந்தேன்

08) 1996ம் ஆண்டு எனது கவிதை நிகழ்ச்சி உள்ளுர்வானொலியில் ஒலிபரப்பானது

08) 1997ம் ஆண்டு வவுனியாசென்று அகதி முகாம்களில் தங்கி பின் திருகோணமலையடைந்து கப்பல்மூலமாக யாழ்ப்பாணம் வந்தடைந்தேன்

09) 1997ம் ஆண்டு யாழ் இந்துக்கல்லூரியில் மீண்டும் இணைந்து உயர்தரக்கல்வியை(உயர்தரம் 98) கணிதப்பிரிவில் தொடர்ந்தேன்

10) 1997ம் ஆண்டு கல்லூரியின் லியோக்கழகத்தின் (97-98) தலைவராக பதவியேற்றேன்

11) 1998ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட லியோக்கள் தின விழாவில் மாவட்டத்தின் சிறந்த லியோக்கழகம் என்பதற்கான விருதினை பெறக்காரணமாயிருந்தமை மகிழ்ச்சி தருகிறது

12) 1998 கல்லூரியின் ஆண்டுக்கான சிறந்த லியோ என்ற விருதைபெற்றுக்கொண்டமை

13) 1998 உயர்தரப்பரீட்சையில் தோல்வியை தழுவியமை என்னை கல்வியில் கவனம் திருப்ப வழிசெய்தது

14) 1999 ம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாக முடியவில்லை

15) 1999 ம் ஆண்டு எனது கணினிக்கல்வியை முதன்முதலாக “பஸ்கால்” எனும் கணினி மொழியினை ரி.ஆர்.ஆர்.ஓ நிறுவனத்தில் கற்று அதிசித்தி பெற்றேன்.

16) 1999 ம் ஆண்டு ஐ.பி.எம்.எஸ் நிறுவனத்தில் “விசுவல்பேசிக்” கணினிமொழியினை கற்றுக்கொண்டு அங்கேயே பயிற்றுவிப்பாளராக கடமையாற்றினேன்.

17)இக்காலப்பகுதியில் யாவா மற்றும் கணினி மென்பொருட்கள் சிலவற்றை கற்று தேர்ந்து கொண்டேன்

18) 2000ம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தபோதிலும் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியை பெறமுடியவில்லை.மீளத்திருத்தலுக்கு விண்ணப்பித்தபோது 180 புள்ளிகளை பெற்ற போதிலும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலப்பகுதியை தாண்டிவிட்டதனால் சாத்தியமில்லாமல் போயவிட்டது.

19) 2001 ஏப்ரலில் கப்பல்முலமாக மேற்படிப்புக்காக கொழும்பு சென்றேன்

20) 2001 மேயில் ஐடிஎம் இல் கணினி டிப்ளோமா கற்கைநெறியை தொடர்ந்த அதேவேளை மேற்படிப்புக்காக லண்டன் செல்வதற்கு முயற்சிசெய்தேன்

21) 2001 யூன் மாதம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான தெரிவுப்பரீட்சையில் சித்தியடைந்தேன்

22) இவ்வாறே இதேஆண்டு கட்டுநாயக்கா தொழில் நுட்பக்கல்லுரியின் பொறியியல் விஞ்ஞானத்துக்கான தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கான தெரிவுப்பரீட்சையிலும் சித்தியடைந்தேன்

23) 2001 ம் ஆண்டு எனது முதல் விமானப்பயணத்தை இரத்மலானையில் இருந்து யாழ்பாணத்துக்கு மேற்கொண்டேன்

24) 2001 ம் ஆண்டு எனக்கு லண்டன் கிறீன்விச் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கிடைத்தபோது மகிழ்ச்சியடைந்தேன்,பின்னர் விசா அனுமதி நேர்முகத்தேர்வில் சரியான பணபலம் காட்டப்படாததன் காரணமாக எனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

25) 2001 செப்டம்பர் மேற்படிப்பு பயணம் தடைப்பட்டதால் மேற்கொண்டு வெளிநாட்டு முயற்சியை கைவிட்டு உள்நாட்டிலேயே கல்வியை தொடர முடிவெடுத்தேன்

26) கொழும்பில் இருந்தவாறே கொழும்பு பல்கலைக்கழக வெளிவாரி படிப்பையும் அதேநேரத்தில் லண்டன் பொறியில் சபையின் சாட்டட் எஞ்சினீயரிங் கற்கை நெறியையும் தொடர முடிவுசெய்தேன்

27) எனது முதற்கணினியை 2001 இறுதிப்பகுதியில் வாங்கினேன்.

28)எனது ஆர்வம் இன்ரநெட்,புறேகிராமிங்,தமிழ்,பத்திரிகைத்துறை போன்றவற்றில் சென்றது. இன்ரநெட்டில் பெருமளவு காலத்தை கழித்தேன்

29) 2002 இல் பகுதிநேரமாக புறோகராமிங் வேலையில் இணைந்தேன். நண்பனின் நிறுவனத்தில் புறோகிராமராகவும் கணினி பயிற்றுவிப்பாளராகவும் வேலை செய்தேன்.

30) 2002 காலப்பகுதியில் மேற்படி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கம்பியூட்டர் ருடே சஞ்சிகையில் கட்டுரைகளை வலைச்சிட்டு,கம்பியூட்டர்ஜி என்ற பெயர்களிலும் சொந்தபெயர்களிலும் எழுதிவந்தேன்

30) 2002 நவம்பர் காலப்பகுதியில் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்தேன். அது இன்று பிரபல தமிழ் தளங்களில் ஒன்றாக திகழ்கிறது

31) 2003 ஆரம்பத்தில் நண்பனின் நிறுவனத்தில் இருந்து விலகி தனியே எனது தொழிலை ஆரம்பிக்க முடிவுசெய்தேன்

32) 2003 இல் எனது நிறுவனத்தை கொழும்பு மேல்மாகாண கம்பனிப்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டேன்

32) கல்வி நடவடிக்கைள் தொழில் முயற்சிகளின் நடுவே கல்விக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்க முடியாதமையினால் 2004 இல் லண்டன் பொறியியல் சபையின் சாட்டட் எஞ்சினீயரிங் கற்கை நெறியை 1ம் நிலையுடனேயே நிறுத்திக்கொள்ள முடிவுசெய்தேன்

35) 2003 இல் சீதனம் சம்பந்தமான எனது கட்டுரை ஒன்று இணையத்தளத்திலும் உள்ளுர்பத்திரிகையிலும் வெளிவந்தது

33) 2004 ம் ஆண்டு கொழும்பில் மென்பொருள் நிறுவனமொன்றில் தலைமை புறோகிராமராக இணைந்துகொண்டேன்

34) 2004ம் ஆண்டு எனது நண்பன் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட “கம்பியூட்டர் போக்கஸ்” கணினி சஞ்சிகையின் இணையாசிரியராக கடமையாற்றினேன் இரண்டு இதழ்களுடன் இது நின்றுபோனது தூரதிஸ்டவசமானது.

34) 2004 இலங்கை ஒலிபரப்புகூட்டுத்ததாபனத்தின் விடியும் வேளை கணினி நிகழ்சியில் அவர்களின் கலையகத்தில் நடந்த நேர்முகத்தில் 3 தடவைகள் பங்கேற்றேன்

35) 2004 இல் எனது கட்டுரை ஒன்று இணையத்தளத்திலும் உள்ளுர்பத்திரிகைகள் இரண்டில் வெளிவந்தது

34) 2004 ம் ஆண்டு உலகத்தமிழ் தகவல்தொழி்ல் நுட்ப மன்றத்தில் உறுப்பினராக இணைந்துகொண்டேன்

34) 2004 ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலக தமிழ் இணையமாநாட்டில் எனது கட்டுரை (ஈழத்தில் தமிழ் தகவல் தொழில் நுட்பமும் மின்னரசாங்கமும்) ஏற்றுக்கொள்ளப்பட்டது

35) 2004 ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர்சென்று 6 நாட்கள் தங்கி மகிழ்சியுடன் தாயகம் திரும்பியது மறக்கமுடியாத நிகழ்வு

36) 2005 ஆண்டு ஒக்டோபரில் கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கு முற்றுமுழுதாக திரும்பி எனது நிறுவனத்தினை திருநெல்வேலியில் ஆரம்பித்து நடாத்திவருகிறேன்

37) 2005 ஒக்டோபரில் இருந்து எனது கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் நடப்பாண்டு செயற்குழு உறுப்பினராக இருந்து கல்லூரிக்கு சேவைசெய்வதில் பெருமையடைகிறேன்

38) 2005 இறுதிப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் நிர்வகிப்பாளராகவும் பழையமாணவர் சங்கத்தின் இணையத்தளத்தின் நிர்வகிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றேன்
39) 2006 தமிழ் இணையத் தேடுபொறிக்கு ஒரு முன்னோடியாக கூகிள்தமிழ்.கொம் இணையத்தளத்தினை அமைத்திருக்கின்றேன். அதைவிடவும் மாலை.கொம் வேம்படி .கொம் ஆகிய இணையத்தளங்களையும் ஆரம்பித்திருக்கின்றேன்

40) 2006 மே மாதத்தில் இருந்து பிசி ரைம்ஸ் கணினிச்சஞ்சிகையில் கட்டுரைகளை சொந்தப்பெயரிலும் கம்பியூட்டர்ஜி,தவா என்ற பெயர்களிலும் எழுதிவருகின்றேன்

41) 2006 இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணம் நகர்மைய றோட்டறக்ட் கழகத்தின் உறுப்பினராக இணைந்து தற்போது அதன் தகவல் தொழில் நுட்ப இயக்குனராகவும் இருக்கின்றேன்

42) 2007 யூலை மாதத்தில் இருந்து “மைகொம்யூட்டர்” எனும் தமிழ் கணினி சஞ்சிகையினை இதன் ஆசிரியராக இருந்து வெளியிடுகிறேன்.

43) 2010 யூன் மாதம் இந்தியாவில் கோவையில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்டு ”இலங்கையில் மின்னரசாங்கம்” குறித்து கட்டுரை வாசித்திருந்தேன்

44) 2010 பெப்ரவரி தொடக்கம் யாழ் பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவமானி இணையவழி கற்கைநெறியின் இணைய முகாமைத்தவத்தளத்தின் கட்டுப்பாட்டாளராக கடமையாற்றினேன்

45) 2011 பெப்ரவரி முதல் டிசம்பர்வரை Computer Today கணினிச்சஞ்சிகையின் ஆசிரியர் பீட உறுப்பினர்களில் ஒருவராக தொழிற்பட்டேன்

46) 2011 மார்ச் மாதம் எனது ”எந்தக்கணத்திலும் ஏமாற்றப்படலாம்” என்ற கட்டுரை உதயன் பத்திரிகையில் வெளிவந்தது

47) 2011 மே 15 முதல் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையத்தின் செயலாளராக பணியாற்றுகின்றேன்

48) 2012 ஜூன் 2ம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற உலகத்தமில் இலக்கிய மாநாட்டில் தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன்

49) 2013 இல் அமமாவின் கனவை நிறைவேற்ற அவரை அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியா பயணம்

50) 2014.02.09  இல் திருமணம்

51) 2014 இல்  மனைவியுடன்  சிங்கப்பூர் பயணம்

52) 2014 இல்  மனைவியுடன்  இந்தியா பயணம்

53) 2016 இல் பிலிப்பைன்ஸ் பயணம்

54) 2016 இல் வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தை உருவாக்கிய வேளை அதன் தலைவராக பொறுப்பேற்றேன்

55) 2017 இல் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தில் இரண்டாவது தடவையாக செயல் இயக்குனராக பதவி ஏற்றேன்.

56) 2018 இல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் பழையமாணவர் சங்கத்தின் உதவிச்செயலாளராக கடமையாற்றினேன். அதன்போது கல்லுாரியில் நடைபெற்ற லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி கண்டோம்.

57) 2019  இல் கண்காட்சி ஒன்றில் பங்கேற்க  இந்தியாவின் கைதரபாத் பயணம்

58) 2019 இல் கல்லுாரி நண்பர் ஒன்று கூடலுக்கான மலேசியா பயணம்

59) 2019 இல் எனது சொந்தப்பணத்தில் நிலம் ஒன்றை திருநெல்வேலியில் கொள்வனவு செய்தேன்

60) 2021 இல் பல்கலைக்கழக வேலையினை விட்டு நீங்கினேன் என்னுடைய மென்பொருள் நிறுவனத்தை தொடர்ந்து நடாத்திக்கொண்டிருக்கின்றேன்

58) 2021 இறுதியில்  உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்  2022 ம் ஆண்டுக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டேன்

மேற்குறித்தவை யாவும் எனது வாழ்கைப்பயணத்தின் பிரதான மைல்கல்கள் எனலாம் இவற்றுக்கிடையில் எத்தனையோ கதைகள் சம்பவங்கள் புதைந்து கிடக்கின்றன அவைபற்றி விரிவாக பிறிதொரு இடத்தில் பதிவுசெய்ய இருக்கின்றேன்

எனது இலட்சியக்கனவு: நான் முற்போக்காளனாக திகழ்ந்து நமது நாட்டுக்கும் என் இனத்திற்கும் என் துறை சார்ந்த சேவைகளைச்செய்து கீர்த்தியுடன் வாழ்வதும் எனது தாய்மண்ணில் உள்ளவர்களும் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பயன்களை பெற என்னாலியன்றதை செய்வதும் ஆகும்

எனது பயணம் தொடர்கிறது…..